Editorial / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில
ஒரு கோடியே 5 லட்சத்து 24 ஆயிரத்து 575 ரூபாய் 30 சதம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை இரண்டு கால்களில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சித்த, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், நீர்கொழும்பு கதவல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 54 வயதான நபர் ஆவார். அவர் சிவில் விமானப் பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
24 கரட் தங்க பிஸ்கட்டுக்கள் 51 யை அவர், தன்னுடைய இரண்டு கால்களிலும், காயங்களுக்கு கட்டப்படும் பெண்டெச்னினால் சுற்றி, அதன்பின்னர் அவற்றை காலுறைகளின் ஊடாக சுற்றி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு புறப்பாடு சாளரத்தை விட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 06.50 மணிக்கு வெளியேறும் போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த தங்க பிஸ்கட்டுகள் 5 கிலோகிராம் 941 கிராம் எடை கொண்டவை, மேலும் விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதற்காக யாரோ ஒருவர் அவற்றை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், அவர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்று சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago