2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட வலயம் சிறிதானது

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி, ஜே.ஏ.ஜோர்ஜ்

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதனைச் சுற்றியுள்ள 500 மீற்றர் அளவிலான பிரதேசம் தடைசெய்யப்பட்ட வலயமாக காணப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

வெடித்த குண்டுகளின் பாகங்கள் ஆங்காங்கே சிதறியுள்ளதால் அவற்றை முழுமையாக அகற்றும் வரை குறித்த 500 மீற்றர் அளவான பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்ட போது 5 கிலோமீற்றர் அளவிலான பிரதேசம் தடைசெய்யப்பட்ட வலயமாக காணப்பட்டது. நேற்று அது 1 கிலோமீற்றராக குறைவடைந்தது.

இன்றைய தகவலின்படி 500 மீற்றர் பரப்பளவிலாள பகுதியே சூனிய பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது என்று  அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .