2025 மே 05, திங்கட்கிழமை

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம் : விசாரணைகள் ஆரம்பம்

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற  அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 

இதில் உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X