Freelancer / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பல்வேறு தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களை விஞ்ஞான ரீதியாக பரிசீலனை செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் பேராசிரியர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுக்கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
நேற்றை தினம் (26) வரை 12 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டு கட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் 2.2 மில்லியன் பேருக்கு மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியும் உள்ளது.
இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலுமே கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்ள சிறந்த தீர்வு தடுப்பூசியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago