2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

தினமும் உல்லாசத்திற்கு அழைப்பார்: மனைவி மீது வாலிபர் பரபரப்பு புகார்

Editorial   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுக்கை அறை நெருக்கத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக மனைவி அளித்த புகாரை வாலிபர் மறுத்துள்ளார். தினமும் தன்னை தனது மனைவி தான் தாம்பத்தியத்துக்கு அழைத்து சித்ரவதை செய்வார் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு புட்டேனஹள்ளி பொலிஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை எனது கணவர் வீடியோ பதிவு செய்து அவரது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரான சையது இனாமுல்(வயது 35) மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயாராகி வந்தனர்.

இந்த நிலையில் தன் மீது தன்னுடைய மனைவி அளித்த புகாரை சையது இனாமுல் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘எனக்கு 2 திருமணம் ஆகவில்லை, ஒருமுறை தான் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மனைவி தான். வேறு எந்த பெண்களுடனும் எனக்கு தொடர்பு இல்லை. என் மனைவி தான் என்னிடம் இருந்து ரூ.17 லட்சம் வாங்கியுள்ளார். என் மனைவிக்கு நான் தான் ரூ.13 லட்சம் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு தினமும் என்னை தாம்பத்தியத்தில் ஈடுபட என் மனைவி வற்புறுத்துவார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு மனநோயாளி போல் நடந்து கொள்வார். என் மனைவி தான் என்னை அதிக அளவில் சித்ரவதை செய்து வந்தார். இவ்வாறு சையது இனாமுல் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X