Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
J.A. George / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4348 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக இராணுவத் தளபதியும் கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (21) மாலை கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இராணுவத்தினால் மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (21) தனிமைப்படுத்தப்பட்ட 149 இற்கும் அதிகமான நபர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4348 பேர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்பொழுது, 1582 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஏற்கெனவே கொவிட்-19 தொற்றுக்குள்ளான ஒரு பெண்னுடன் நெருங்கி பழகியவர்கள், கும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களான 242 இற்கும் அதிகமான நபர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
அதேவேளை, அதே பிரதேசத்தில் இருந்து 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 நபர்களை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்று (21) அனுப்பியுள்ளோம்.
நேற்று பிலியந்தல மற்றும் பொரலஸ்கமுவை பிதேசத்தில் இருந்து இனங்காணப்பட்ட இரண்டு கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அதன்படி, குறித்த பொரலஸ்கமுவை பிரதேசத்தை சேரந்த நோயாளர் மருந்தினை பெற்றுக் கொண்ட தனியார் மருத்துவ நிலையத்தின் தாதி ஊழியர்கள் குறித்த தனியார் மருத்துவ நிலையத்தினை மூடிய பின்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதேபோல், பிலியந்தலை நோயாளியுடன் தொடர்புடைய அனைவருக்குமான தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago