2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

Editorial   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமா? அல்ல நீட்டிக்கப்படுமா? என்பது தொடர்பான அறிவிப்பு நாளை (10) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்புக்கான செயலணி நாளை(10) கூடவுள்ளதுடன், இந்த கூட்டத்திலேயே தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. 

எனினும், கொரோனா நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், 30ஆம் திகதி முதல் இந்த மாதம் 6ஆம் திகதி வரை அந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டது. 

பின்னர், தனிமைப்படுத்தல் ஊரடங்கினை எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க ஜனாதிபதி தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணி கடந்த வாரம் தீர்மானித்தது.

கடந்த காலங்களில் கொரோனா மரணங்களின் நாளாந்த எண்ணிக்கை 200ஐ தாண்டி பதிவாகியிருந்ததுடன், கடந்த  சில தினங்களாக அந்த எண்ணிக்கை 185 வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X