Nirosh / 2022 ஜனவரி 04 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை - பலகடுவ பிரதேசம், அதனை அண்டிய பிரதேசங்களில் விநியோகிக்கப்பட வேண்டிய கடிதங்கள் பலவற்றை,ஒருமாதத்துக்கும் மேலாக தன்வசம் வைத்திருந்த தபால் ஊழியரை சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, மாத்தளை தபால் அத்தியட்சகர் அநுர ரத்நாயக தெரிவித்துள்ளார்.
உக்குவெல தபால் நிலையத்தில் சேவையாற்றிய இந்நபர் விநியோகிக்கப்பட வேண்டிய கடிதங்களை விநியோகிக்காது தன்வசம் வைத்திருந்துள்ளதாகவும், நேர்முகத்தேர்வுக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள், வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், ஓய்வூதியக் கடிதங்கள் உள்ளிட்ட பல கடிதங்களை இவர் விநியோகிக்காது வைத்திருந்தார் எனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளுக்கான கடிதங்கள் பலவற்றை விநியோகிக்காமையால், தங்களது நகைகள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .