2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

’தமிழர்களுக்கு நீதி கிடைக்காது’

Freelancer   / 2024 மே 23 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் அராஜகமும் அடக்க முடியாத அதிகாரப்பசியும் தமிழ் மக்களின் வாழ்வியலை பறித்தெடுக்கின்றது. இந்த நாட்டில் நீதி மரணித்து விட்டது. சட்டம் சாகடிக்கப்பட்டு விட்டது .இலங்கையின் சட்டத்தினால் தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என  இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுத்தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறதா? சட்டங்களின் வரையறைகளை  பின்பற்றுகின்றதா?  நீதித்துறை சட்டங்களின்  ஊடாக கொண்டுவரப்பட்ட பல்வேறு விடயங்கள் அந்த நீதித்துறை  ஊடாகவே நடைமுறைப்பபடுத்தப்படாமல் போகின்றது .கடந்த மே 17,18 ஆம் திகதிகளில் இலங்கையின் பல பாகங்களில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் இந்த நாடு ஒரு சட்டத்திற்குள்தான் இருக்கின்றதா? என்பதையும் இங்கு கேட்க விரும்புகின்றேன்.  

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட 15 ஆம் ஆண்டு நிறைவில் அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுபடுத்தி வடக்கு,கிழக்கு தெற்குமக்கள் கூட இந்தக்கஞ்சியை எல்லா இடங்களிலும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது , இவ்வாறு செய்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள சம்பூரில் கஞ்சி காய்ச்சியதற்காக இரவில் வீடு புகுந்து பெண்களை பொலிஸார் அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர். இவ்வாறு கைது செய்வது   எந்த நாட்டு சட்டத்திற்குள் உள்ளது. ?இலங்கை சட்டத்தில் இவ்வாறு உள்ளதா அல்லது இன்னொரு நாட்டு சட்டத்தை இலங்கை பின்பற்றுகின்றதா? என்றும் வினவினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X