Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.சுகிர்தகுமார்)
தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது என்பதும் தமிழர்களின் கழுத்தை நசுக்குவது என்பதும் ஒன்றென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழர்களை அரசாங்கம் புறக்கணிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது எனும் செய்தி, தமிழ் மக்களிடையே கவலையையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது.
பாரம்பரியமொழி, செம்மொழி முதல்மொழி, மூத்தமொழி என பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் வடகிழக்கு தமிழர்களை ஜக்கிய தேசிய கட்சி கடந்த காலத்தில் ஏமாற்றியது என தெரிவித்த அவர், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என தற்போதைய அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுப்போம் என கூறினார்.
கடந்தக் காலத்தில் ஜக்கிய தேசிய கட்சிக்கு எவ்வாறு அழுத்தங்களைக் கொடுத்தோமோ அதேபோல, தற்போதைய அரசாங்கத்துக்கும் கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில், அழுத்தம் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago