2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழர்கள் இருவர் கடத்தல்: கமாண்டருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில், இருவரைக் கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்டமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் கே.ஏ தயானந்த, இன்று (25) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் கேசர சமரதிவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்டினன்ட் கமாண்டர் கே.ஏ தயானந்த, சம்பூர் கடற்படை முகாமில், புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.

நகர சபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமானந்தன் ஆகிய இருவரே, 2009ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரான லெப்டினன்ட் கமாண்டர் அனில் மாபா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .