2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’தமிழின அழிப்புக்கான ஆயுதத்தை நீக்கவும்’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழின அழிப்புக்குப் பிரதான ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாற்றாக,  பிறிதொரு சட்டம் இயற்றப்படக் கூடாது என  தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (06) அன்று இடம்பெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும்,  பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க  வேண்டும். கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் பயங்கரவாத  தடைச்சட்டத்தை நீக்குவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அச்சட்டத்தையே செயற்படுத்தின.இதனால் பாரிய விளைவுகள் மக்களுக்கு ஏற்பட்டன .

கடந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்த போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதற்கு அப்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கக் கூடாது என்று குறிப்பிட்டார் இந்த நிலைப்பாட்டில் தான் நாங்களும் இருக்கின்றோம்.

இந்த நாடு பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் சீரழிவதற்குப் பயங்கரவாத தடைச்சட்டம் பிரதான காரணமாக அமைந்தது. ஜே வி.பியின் தலைவர் ரோஹன விஜேவீரவும், அதன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாகவே கொல்லப்பட்டார்கள். ஆகவே, ஜே.வி.பியின். இந்நாள் தலைவரான  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த சட்டத்தை முழுமையாக நீக்க  வேண்டும். 
அதேவேளை, அந்தச் சட்டத்துக்கு மாற்றாக  பிறிதொரு சட்டம் இயற்றப்படக்  கூடாது என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X