Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுககு சரியான சந்தர்ப்பம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது”என, தமிழ்த் தேசிய பணிக்குழுவின் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (07) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “ஜனாதிபதி, தன்னை தாக்க முனைந்தவரையே சிறையிலிருந்து விடுவித்தவர்; மன்னிப்பு வழங்கியவர். அவரின் மனிதநேயம் நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு இடமளிக்கும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
“ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் தமது வெற்றியின் பின் சிறையிலிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பது தொடர்பில் தேர்தல் மேடைகளில் அறிவிக்கப்படுகின்றது.
“இந்த தருணத்தில் மன்னிப்பு கொடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கி அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்க முடியமென தமிழினம் எதிர்பார்க்கின்றது
“பல வருடங்களாக சிறையில் வாடும் உறவினர்களின் ஏக்கத்துக்கு ஜனாதிபதி செவிமடுப்பார் என்று நம்புகின்றோம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .