Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில், எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தனது கடுமையான விமர்சனத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு முன்னால் முன்வைத்தார்.
ஊடக சுதந்திரம், சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான கொழும்புப் பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் முதலாவது நாளில் நேற்று (27) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட மாவட்டமாக, யாழ்ப்பாணமே உள்ளது எனத் தெரிவித்த அவர், ஒரே ஊடகத்தைச் சேர்ந்த அறுவர் அவர்களுள் உள்ளடங்குகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், அவ்வூடகம் மீது 33 தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனவும் ஞாபகப்படுத்தினார்.
தன்னுடைய ஞாபகம் சரியெனில், 13 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த அவர், அவர்களின் படுகொலைகள் தொடர்பாக எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களின் அச்சுறுத்தல் விடயத்தில், இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற்கொள்ளும் போது, இந்நிலை அவமானகரமானது என அவர் குறிப்பிட்டார்.
மறுபக்கமாக, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, பிரதீப் எக்னெலிகொடவின் கடத்தலும் காணாமல் ஆக்கப்பட்டமையும், கீத் நொயார் மீதான கடத்தலும் சித்திரவதையும் ஆகியன தொடர்பான விசாரணைகள், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற போதிலும், அவற்றில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார்.
ஊடகங்கள் மீது கடும் விமர்சனம்
ஊடகங்களின் சுதந்திரம் தொடர்பாகத் தனது கவனத்தை வெளிப்படுத்திக் கருத்துகளை வெளியிட்ட சுமந்திரன் எம்.பி, ஊடகங்களின் தற்காலப் போக்குகள் தொடர்பாகவும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
குற்றவியல் மானநஷ்டச் சட்டங்களை இல்லாமற் செய்தமையும், பத்திரிகைச் சபையை இடைநிறுத்தியமையும் சிறப்பான விடயங்களெனக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி, ஆனால், உண்மையைச் சொல்வதற்கு, ஊடகங்களுக்கு எவ்வளவு வாய்ப்பை இவை வழங்கியிருக்கின்றன என்பது கேள்விக்குரியதே என்று குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரத்துக்காக, எப்போதும் போராடி வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், லசந்த விக்கிரமதுங்க, எஸ்.ஜே. திஸ்ஸநாயகம் போன்ற ஊடகவியலாளர்களின் கடந்தகால வரலாற்றையும் ஞாபகப்படுத்தினார்.
ஆனால், தற்போதைய நிலையில் தங்களது போராட்டம், ஊடகங்களுக்கு எதிரானவையாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஊடகங்கள், பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்கின்றன எனக் குற்றஞ்சுமத்தினார். அத்தோடு, உண்மையற்ற விடயங்களைச் சொல்வதற்கு, ஊடகங்களிடம் தடையுணர்வு இல்லாமல் உள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.
ஊடகங்கள் தொடர்பான அந்நிகழ்வில், மறையான கருத்துகளை வெளியிடுவதாகத் தெரிந்தால், அதற்குக் கவலையடைவதாகத் தெரிவித்த அவர், ஆனால், இவ்விடயத்தை வௌிப்படுத்த வேண்டியுள்ளதெனத் தெரிவித்தார். ஊடங்களின் பொறுப்பற்ற நிலைமை குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago