2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு : கணவன் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .