Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை (28) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார்.அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் பொலிஸார் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் ஜூலை (31) அன்று தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாறுக் ஷிஹான்
8 minute ago
24 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
39 minute ago
1 hours ago