2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

தேயிலை தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து

Freelancer   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் பரவியுள்ளது.

இதில், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமாகின்.

தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தோட்ட மக்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலும் தீயில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X