Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இன்று (16) அதிகாலை நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறிக்கு பின்னால் பயணித்த வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.R
3 minute ago
6 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
45 minute ago
1 hours ago