2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதல்களைத் தடுக்கவில்லையென மனுத் தாக்கல்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க முடியாமற் போனதால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, உயர் நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று ​தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று வருடகாலத்துக்கு, நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக வாதிட முடியாத வகையில் தடை விதிப்புக்கு இலக்காகியுள்ள சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினாலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி, பிரதமல், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, எதிர்க்கட்சித் தலைவர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .