Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
ஹட்டன் - டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தாதி ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டப்படுவதுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, ஹட்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் சிவில் அமைப்புகள், டிக்கோயா நகரசபைக்கு முன்பாக, இன்று (12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை- வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தைச் சேர்ந்த தாதியொருவர், மேற்படி வைத்தியசாலையில் பணிப்புரிந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மரணமடைந்தார்.
தனது மரணத்துக்கு, குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரும் அவரது மனைவியுமே காரணமென்று, வாட்சிப்பின் மூலம் தனது பெற்றோருக்கு அறிவித்துவிட்டு, குறித்த யுவதி தன்னுயிரை மாயத்துக்கொண்டுள்ளாரென்றுத் தெரிவிக்கப்படுகிறது.
தாதியின் மரணத்துக்கான ஆதாரங்கள் இருந்தம் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் ஹட்டன்- டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை, மரண விசாரணை என்பன முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் யுவதியின் உறவினர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாதியின் மரணம் தொடர்பில், ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தாதியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சிவில் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
27 minute ago
04 Jul 2025