2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாய், 2 மகன்கள் உட்பட 16 வயது சிறுமி கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை - அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 5,081,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய், 2 மகன்கள் உட்பட நால்வர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தாயும் 22 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .