2025 மே 01, வியாழக்கிழமை

'தாழ்வாரத்தில் தங்கி சிகிச்சை பெறவில்லை'

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள், தரையிலும் தாழ்வாரத்திலும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என இணைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஏ.ஹேவகே தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளோ அல்லது வேறு எந்த நோயாளிகளுமோ தரையிலோ தாழ்வாரத்திலோ தங்கியிருந்து சிகிச்சை பெறவில்லை என்பதை அறியத்தருவதாகவும் அவ்வறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .