Editorial / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னசாமி ஷிவானி
அமைச்சரவைத் திருத்தம் குறித்து இன்றைய தினம் அறிவிப்பதாக தாம் உறுதிபடக் கூறவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களில் ஒருவர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என கடந்த வாரம் கூறினீர்கள், ஆனால், தற்போது இல்லை என அதனை மறுக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
இதன்போது தனது தொனியை உயர்த்திய அமைச்சர் ராஜித, “நான் அவ்வாறு உறுதியாகக் கூறவில்லை. மாற்றம் நிகழலாம் என்றே கூறினேன்” எனத் தெரிவித்ததார். அத்துடன், “அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும். அவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதி குறித்து இப்போது கூற முடியாது.
“ஒரே நாளில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? எந்த நாட்டிலும் அவ்வாறு இடம்பெறாது. பொருத்திருங்கள் ஓரிரு வாரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம்” என்றார்.
இதன்போது மற்றுமொரு ஊடகவியலாளர், அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேமஜயந் ஆகியோர் அமைச்சரவைச் சந்திப்பில் ஏன் கலந்துகொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பியதுடன், தயாசிறி ஜயசேகர தொடர்ச்சியாக அமைச்சரவை ஊடகச்சந்திப்பை, புறக்கணித்து வருவது ஏன் எனவும் வினவினார்.
“அவர்கள் கலந்துகொள்ளாதது குறித்து அவர்களிடமே வினவுங்கள்” எனக்கூறிய அமைச்சர் ராஜித்த, “நான் இப்போது வைத்தியராக வேலை பார்ப்பதில்லை” எனச் சட்டெனப் பதிலளித்தார்.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026