Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதியன்று ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பகிரங்க விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மின்சாரத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் மின்வெட்டுக்கான மூல காரணங்களை அடையாளம் காண்பதையும் இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் பகேற்பதற்காக பொதுமக்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .