Editorial / 2026 மே 03 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
திருகோணமலை, திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர், 01 ரூட், 29 பேர்ச்சஸ் காணித்துண்டு, பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர், 02 ரூட், 01 பேர்ச்சஸ் காணித்துண்டு மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைந்துள்ள 26 பேர்ச்சஸ் காணித்துண்டு என்பன திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குச் சொந்தமானவை என உறுதிப்படுத்தக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இக்காணிகளுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கைப்பொறுப்பாளர் சபைக்கு வழங்கக் கோரி, சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலைமையிலான ஆலய நிர்வாக சபையினரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி (29.04.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து ஆலய நம்பிக்கைப்பொறுப்பாளர் சபையின் தலைவர், சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் மேலும் தெரிவிக்கையில்:
“1950ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள், தொல்பொருள் திணைக்களத்தின் இடையூறுகள் மற்றும் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பன இடம்பெற்று வருகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்தி, ஆலயத்தின் ராஜகோபுரக் கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”


38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago