2024 மே 03, வெள்ளிக்கிழமை

திருச்சபை சர்வதேச விசாரணைக்காக ஐ.நாவுக்கு செல்லவுள்ளது

Simrith   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க கத்தோலிக்க திருச்சபை பல வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக அந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற நோக்குடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 21, 2019 அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று பிபிசி சிங்கள சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த போதிலும், தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி அல்லது அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக வாய்மொழியாக வழங்கிய வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றத் தவறிய சூழலில், தற்போது இந்த விஷயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள் மீது அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என கர்தினல் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு கலவரத்தின் போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவும், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக வெறும் தூதுவராகவே செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விவரிக்கப்பட்ட கொழும்பு வடக்கின் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றாமல் இருந்த தேசபந்து தென்னகோன்  இன்று பொலிஸ் மா அதிபராக எள்ளார் (IGP) எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய புலனாய்வுப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும், படுகொலைகளைத் தடுக்கத் தவறிய அப்போதைய SIS பணிப்பாளர் நிலாந்த ஜெயவர்தன இன்று பொலிஸ் துறையின் இரண்டாவது நிலைப் பணிப்பாளராக உள்ளார்.

இவ்வாறான நிலையில் நீதியை எதிர்பார்க்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .