2025 ஜூலை 10, வியாழக்கிழமை

திருமலையில் ஹெரோயினுடன் நால்வர் கைது

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையை மய்யப்படுத்தி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்,  கடற்படையினர் இணைந்து முன்னெடுத்த சோதனை செயற்பாடுகளின் போது  ஹெரோயினுடன் நால்வர் சிக்கியுள்ளனர். 

குறித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஓட்டோ ஒன்றை சோதனையிட்ட போதே அதில் பயணித்த இருவர் கைது செய்யப்ட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 1720 கிராம் ​ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

அதேபோல் சீனத் துறைமுக வளாகத்துக்குள் வீதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த பயணித்த சந்தேகத்துக்கிடமான மேலும் இருவரை சோதனையிட்ட போது அவர்களிடமிருந்தும் 820 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி நாள்வரிடமிருந்து 2540 கிராம் ஹெரோயின் மொத்தமாக மீட்பட்டுள்ளதோ, அவர்கள் வசமிருந்த ஓட்டோவையம் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருமலை, சீன துறைமுகத்தை அண்டிண பகுதியில் வசிப்பவர்கள் என்றும், மேலதிக விசாரணைகள் நிமித்தம் அவர்களை உப்புவேலி பொலிஸாரிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .