2025 ஜூலை 12, சனிக்கிழமை

துனேஷ் கன்கந்தவும் இணைந்தார்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இன்னோர் உறுப்பினரும் இணைந்துள்ளார். இதன்படி, ஐந்து உறுப்பினர்கள், இதுவரை அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான துனேஷ் கன்கந்தவே, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சராக, இன்று (30) பதவியேற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே, விஜயதாஸ ராஜபக்‌ஷ, வசந்த சேனாநாயக்க, ஆனந்த அளுத்கே, வடிவேல் சுரேஷ் ஆகிய, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்து, அமைச்சு, இராஜாங்க அமைச்சு, அல்லது பிரதியமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .