2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூடு- பெண்ணொருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ்- ஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்  சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு குறித்த பெண் உதவி புரிந்துள்ளாரென்ற சந்தேகத்தின் பெயரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளாரென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளுமென்டல் சங்காவை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நேற்றுக்காலை 8 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் மரணமடைந்தார். மேலும் நால்வர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .