2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கந்தானை, வெலிகம்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பெண் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர், ஜா-​எல பி​ரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர். பிரேத பரிசோதனைகள் இன்று மாலை மேற்கொள்ளப்பட உள்ளது.

குறித்த துப்பாக்கச்சூட்டுக்கு காரணமும் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X