2025 ஜூலை 05, சனிக்கிழமை

தூக்குக் கயிற்றின் தரம் ஆராய்வு

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தூக்கு மேடையிலுள்ள கயிறு, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான தரத்தில் காணப்படுகின்றதா என்பது தொடர்பில், கயிற்றின் தரத்தை ஆராய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்வுக்காக கயிறை இலங்கை தரச்சான்றிதல் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கயிறின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தரமான புதிய தூக்குக் கயிறை வெளிநாட்டிலிருந்து இறக்கும் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கயிறானது, கடந்த 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .