2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தெமட்டகொட துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த மூவருள் ஒருவர் இன்று மாலை 6.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் ​தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய நபரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இன்று மாலை பெற்றோலிய கூட்டுதாபன வளாகாத்துக்கு வருகைத் தந்த போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு துப்பாக்கிப் பிர​யோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது குறித்த பிரதேசத்தில் கலகம் அடக்கும் பொலிஸார், பொலிஸ் விசேடப் படையணி, என்பன இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

மேலும் சம்பவ இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் குழு ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .