2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ தேசிய பாதுகாப்பு பூச்சியம் ஆகாது’

Niroshini   / 2018 ஜூலை 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

படை முகாம்களைக் குறைப்பது, படையினரைக் குறைப்பது இராணுவத் தலைமையகம் எடுத்துள்ள முடிவே தவிர, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவல்​லவெனத் தெரிவித்துள்ள  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, தேசிய பாதுகாப்பு பூச்சியத்துக்கு கொண்டு செல்லப்படமாட்டாது என்றார்.

அத்துடன், வடக்கு, கிழக்கிலிருக்கும் படை முகாம்கள் எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்படமாட்டாது. குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்ற படைகள் இரண்டு, ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்படும் என்றார்.  

இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

யுத்தத்துக்குப் பின்னர், படையணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதாவது, படையினர் குறைவாக உள்ள படையணிகளை ஒன்றிணைத்து ஒரு படையணியாகக் கொண்டுவரும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுவதாக, இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கிலுள்ள படை முகாம்கள் எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்படமாட்டாது என்றார்.

முகாம்களை அகற்ற  வேண்டிய தேவை எமக்கில்லை. இது இராணுவத் தலைமையகம் எடுத்துள்ள தீர்மானம். இது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானமும் இல்லை என்று தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளால், தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படாது. தேசிய பாதுகாப்பு பூச்சியத்துக்குக் கொண்டு வரவோ அல்லது சர்வதேசத்துக்கு ஏற்படைய வகையிலோ இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. சுருங்கக் கூறின், இது இராணுவம் அதன் நிர்வாகத்துக்காகச் செய்த செயற்பாடாகும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .