2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தேரர்களும் குதித்தனர்

Gavitha   / 2020 மார்ச் 16 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலிய ரத்தண தேரர், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் பொதுச் செயலாளர் வண.ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் ஒன்றிணைந்து, அபே ஜனபல கட்சியின் கீழ், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (16) கொழும்பில் நடைபெற்றது.

குறித்தக் கட்சி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எனினும், எந்தெந்த மாவட்டங்களில் எந்​தெந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர் என்பது தொர்பாக, இனிவரும் இரண்டு நாள்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தண தேரர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .