2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலை பிற்போடுவது குறித்து மஹிந்த கவலை

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைகள் தேர்தலை பிற்போடுவது தொடர்பில், நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் கவலையடைவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழு சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வருடத்துக்கான தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த பட்டியலுக்கு அமைய, கடந்தாண்டை விட இந்தாண்டு வாக்காளர் எண்ணிக்கை 230650 ஆக அதிகரித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு தேர்தல்கள் பிற்போடுவது குறித்து, கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கட்சி பிரிதிநிதிகளுடனான சந்திப்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .