2025 ஜூலை 16, புதன்கிழமை

தேர்தல்களை ‘வேண்டுமென்றே அரசாங்கம் பிற்போடுகிறது’

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்களை, அரசாங்கம் வேண்டுமென்றே பிற்போடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமத நிலை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவை, அடுத்த வாரம் சந்திக்கவுள்ளன.  

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளரான கீர்த்தி தென்னக்கோன், உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  

கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களுக்கான சபைகள், ஏற்கெனவே தமது காலத்தை முடித்துள்ள நிலையில், வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளும், இம்மாதம் 28ஆம் திகதியுடன் தமது காலத்தை முடிக்கவுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், “அதன்படி, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள், ஒக்டோபர் 28ஆம் திகதியிலிருந்து இயங்காது” என்று குறிப்பிட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .