Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் முப்படையினர், பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அல்ல. அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்காகவே உள்ளனர் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
பானாகொட காலாட்படையணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விருசர வரப்பிரசாத அட்டைகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேல் மாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட அங்கவீனமான படையினர் மற்றும் மரணமடைந்த படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாத அட்டைகள் வழங்கப்பட்டன.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதியை பாதுகாப்பற்றவராக்க அல்லது அகௌரவபடுத்தும் நோக்கில், முப்படையினரின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை. இராணுவத்தினரிடம் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகள், பிரமுகர்களின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .