Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
'30 ஆண்டுகளாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை விடவும், தற்போதைய அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்பாடானது, „அரசியலமைப்பு ரீதியான பயங்கரவாதமாகும்' என்று, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பேராசிரியர் ராஜா குணரத்தின தெரிவித்தார்.
'தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றவேண்டிய உறுப்புரையை மாற்றியமைக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்திருந்தார், அந்த வாக்குறுதி இன்று எங்கே போனது?' என்றும் அவர் கேள்வியேழுப்பினார்.
நாரஹேன்பிட்டியவில் உள்ள அபயராம விகாரையில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
' டொனமூர், சோல்பரி யாப்புகள் மற்றும் அவற்றுக்கு முன்னர் அமைக்கப்பட்ட யாப்புகள் என்பன இலங்கை, பிரித்தானியர்களின் காலனித்துவத்தின் கீழிருந்தபோது, ஆட்சியாளர்களால் வலிந்து மக்களிடம் புகுத்தப்பட்டது.
இம்முறையினை, 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகள் மாற்றியமைத்தன. ஆனால், தற்போதைய அரசியலமைப்பினை மாற்றியமைக்க வேண்டிய காரணம் என்ன?' என கேள்வியெழுப்பினார்.
விரிவுரையாளர் ஜயதிலக
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட, தேசாபிமான பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவரும் திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடப் விரிவுரையாளருமான நிம்சிறி ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, அரசாங்கம் நல்லாட்சி... என்னும் பெயரில், அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டங்களை மீறும் செயலிலேயே ஈடுபட்டு வருகின்றது.
அவர், 'முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன, தனது பதவியை இராஜனாமா செய்யும் முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார், இச்செயற்பாடானது, அரசியலமைப்புக்கு முரணானது' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .