2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாடாவை வெட்டிய பெண்கள் இருவருக்கும் பிணை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைப-வரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த நாடாவை வெட்டியதாக கூறப்படும் பெண்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் மஹர நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா 2,500 ரூபாய் ரொக்கப்பிணையிலும் தலா 50,000 ரூபாய் பெறுமதியான சரீர பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவ்விருவரையும் கடுமையாக அறிவுறுத்தி விடுதலை செய்தார்.

கடவத்தை, மஹர நுகேகொடையை வசிப்பிடமாக கொண்ட ஜே.ஆர் சுமனா ஜயசூரிய மற்றும் ராகம கெந்தலியெத்தபாலுவவை வசிப்பிடமாக கொண்ட எல்.கே.புஷ்பா குமாரி ஆகிய இருவருமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் மஹர தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல உறுப்பினர்களாவர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு ஜயவேவா' என்றும் கோஷமிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைக்கும் வைபவத்தில்  கலந்துகொண்ட நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, வாத்திய கருவிகள் இசைக்க, நடன கலைஞர்களின் நடனத்துடன் வந்துகொண்டிருந்தபோதே, அந்த பெண்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த கைப்பைக்குள் இருந்த கத்தரியை எடுத்து திடீரென நாடாவை வெட்டியுள்ளனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X