2025 மே 17, சனிக்கிழமை

நீதிமன்ற கட்டளையை மீறிய விவகார வழக்கு டிசெம்பருக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற கட்டளையையும் மீறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படமைக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 27 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் கையளிக்குமாறு நீதவான், குருந்துவத்தை பொலிஸுக்கு கட்டளையிட்டார். 

சந்தேகநபர்கள் 27 பேரில் தேரர்கள் ஒன்பது பேர் அடங்குகின்றனர். ஏனைய 18பேரும் அரசியல்வாதிகளாவர். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகபெரும, உதய கம்மன்பில மற்றும் காமினி லொகுகே உள்ளிட்டவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதற்கு முன்னர் உத்தரவிட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள் மாதத்துக்கு ஒருதடவை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்ற உத்தரவு நேற்றையதினம் இல்லாதொழிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .