2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நிபுணர் குழு நாளை கூடும்

Kanagaraj   / 2016 ஜனவரி 24 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணி  தலைவர் மனோ கணேசனால், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட, புதிய அரசியலமைப்புத் தொடர்பான நிபுணர் குழு, செவ்வாய்கிழமை முதன்முறையாக கொழும்பில் கூடவுள்ளது.

இந்தக் கூட்டம், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் காலை 9 மணி முதல் இடம்பெறும் என்றும் அக்கூட்டணி அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைபுக்கான தமிழ் முற்போக்குக் கூட்டணி நிபுணர் குழு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

நமது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிபுணர் குழுவில் இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அங்கிகாரம் பெற்றுள்ள கல்வி தகைமை கொண்டவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இடம்பெறுகிறார்கள். இந்த குழுவின் பணி தொடர்பிலான வரையறை மற்றும் குறிப்புகள், குழு அங்கத்தவர்களுக்கு மின்னஞ்சலில், கடந்த சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதல் நிபுணர் குழு கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனினும், இந்த பணி முழுமையாக இந்த நிபுணர் குழுவிடமேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உருவாகவுள்ள புதிய அரசியலமைப்பில், நமது கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாஷைகள் இடம்பெறும் வண்ணம் உரிய முன்தயாரிப்பு பணிகளை இந்த கற்றிந்த நிபுணர் குழு செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X