2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நுரைச்சோலை பற்றி பொ.ப.ஆ விசாரணை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளமை தொடர்பில், விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க, குறித்த மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும், அங்கு மீண்டும் இவ்வாறான செயலிழப்பொன்று இடம்பெறக் கூடாது என்ற வகையிலுமே, இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக, குறிப்பிட்டார்.  

மின்னுற்பத்தி நிலையத்தின் பரிமாற்றுப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த சனிக்கிழமை (15) முதல், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் செயலிழந்தது. இதனால், 900 மெகாவொட் மின்சாரத்தை, தேசிய மின் கட்டமைப்பு இழந்துள்ளது.  

இதனால், ஒரு நாளைக்கு ஒன்றரை மணித்தியாலம் என்ற ரீதியில், கொழும்பு தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக, தமித்த குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .