Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள நாலந்த தோட்டத்தில், 100 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமுக்காக அபகரிக்கும் திட்டத்தை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கடுமையாக எதிர்த்துள்ளது.
இத்திட்டத்தைக் கைவிடுமாறு பில்லேபொல பிரதேச செயலாளருக்கு, இ.தொ.கா தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கடிதமொன்றையும், அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில்
மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தத் தோட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக, ஏற்கெனவே 300 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, மேலும் 75 ஏக்கர் நிலம் இராணுவ முகாமுக்காகச் சுவீகரிக்கப்படவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களைப் பாதிக்கும் இத்திட்டத்துக்கு, இ.தொ.கா கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றது என்பதுடன் அத்திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும் காங்கிரஸ் வலியுறுத்துகின்றது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .