Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேரியா தொற்றுக்குள்ளான இந்தியப் பிரஜையொருவர், நுவரெலியாவில் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நபர், கடந்த 3ஆம் திகதி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கான பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர், வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த 7ஆம் திகதி அந்நபர், இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருடத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான 12பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பியபோதே நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .