2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள நீச்சல் கிளப்பின் நீச்சல் குளத்தில் விழுந்த தனது எட்டு வயது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக குறித்த சிறுவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

பிறந்தநாள் விழாவிற்காக அங்கு சென்றிருந்த சிறுவன், நீச்சல் குளத்தில் விழுந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

​​சம்பவத்தின் போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X