2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நாடு திரும்பினார் துனித்

Freelancer   / 2025 செப்டெம்பர் 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

அவர் இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து நாட்டை வந்தடைந்தார். 

அவருடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் நாடு திரும்பியுள்ளார்.

துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X