Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடமாடும் வியாபாரிகள் பின்பற்றி வேண்டிய சுகாதார விதிமுறைகள் குறித்த அறிவித்தலை, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது.
நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவதால், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்ட பொலிஸ் தலைமையகம், அவர்கள் பின்பற்ற வேண்டிய தொடர்ச்சியான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
அந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு, ஊரடங்குச்சட்ட காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று, பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த அறிவித்தலில், சுத்தமான ஆடை அணிதல், பாதங்களை முடும் வகையிலான பாதணி அணிந்திருத்தல், வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் போது முகக் கவசம், கையுறை அணிந்திருத்தல், கிறுமிநீக்கி திரவங்களை தம்வசம் வைத்திருத்தல், வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும்போது, உணவு பண்டங்களை கைகளில் பிடிக்காது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்து அவற்றை நுகர்வோருக்கு கையளித்தல், கடதாசி போன்றவற்றை பயன்படுத்தி பொருள்களை விநியோகித்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பணத்தைப் பெற்ற கைகளை உடனடியாக கழுவாது உணவு பொருள்கள், ஏனைய பொருள்களை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு ஒரு மீற்றர் தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தள ஓடர்களை செய்வர்களும் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் இந்த அறிவுறுத்தல்கள் நேற்று (22)முதல் அமுல்படுத்தப்படுவதாகவும் பொலிஸர் தலைமையகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago