2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நத்தார் தினத்தில் கைதிகளுக்கு விடுதலை இல்லை

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வாரங்களாக இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக, நத்தார் தினத்தையொட்டி சிறைக்கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தில் கைதிகளை விடுதலை செய்வது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நீதி மற்றும் சிறைச்சாலைகள்  மறுசீரமைப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சு ஊடாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டு,ஜனாதிபதியிடம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, குறித்த கைதிகள் தொடர்பான பரிந்துரை நீதி அமைச்சு ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லையென்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக எந்தவொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லையெனவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள அடுத்த வாரமே தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதுடன், அதன் பின்னர் ​விடுதலை செய்யப்பட வேண்டிய கைதிகள் ​தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்றும், தகவல்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .