Janu / 2026 ஜனவரி 01 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக நாய்கள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டுக் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
புது வருட பிறப்பையொட்டி ஏனைய இறைச்சி வகைகளுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ளதுடன், ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago