2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நிர்வாணமாக வீடியோகால் செய்த பெண்ணுக்கு இளைஞர் செய்த செயல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரை சேர்ந்த இளைஞர் டேட்டிங் செயலியில் பழக்கமான பெண்ணிடம் செல்போன் எண்ணை பகிர்ந்தார். இருவரும் வாட்ஸ்அப்பில் பேசி நெருக்கமாகினர். உடலுறவு பற்றி இருவரும் மெசேஜில் பேசி கொண்டனர். அதன்பிறகு அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார். மேலும் இளைஞரையும் ஆடைகளை அவிழ்க்க கட்டளையிட்டார். ஆசையை அடக்க முடியாமல் இளைஞரும் வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் இப்போது அவர் சிக்கலில் சிக்கி உள்ளார்.

பெங்களூர் ஆடுகோடி அருகே வசித்து வருபவர் 25 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அவர் டேட்டிங் செயலியை தனது செல்போனில் டவுன்லோட் செய்தார்.

அந்த டேட்டிங் செயலியின் பெயர் Happn. இந்த செயலியின் வழியாக அவருக்கும் அனன்யா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செயலி வழியாக தினமும் உரையாடி வந்தனர்.

செல்போன் எண்கள் மாற்றம்
இருவருக்கும் இடையே நட்பு உருவானது. அதன்பிறகு அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். இதனால் நினைத்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் மெசேஜை பரிமாறி வந்தனர். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. நட்பு, நலம் விசாரிப்பு என்று உரையாடி இருவரும் அடுத்தக்கட்டத்துக்கு சென்றனர்.

நிர்வாண வீடியோ கால்
இருவரும் தங்களின் காதல் மற்றும் உடலுறவு குறித்த விஷயங்களை மெசேஜில் பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் இடையேயான உரையாடல் ஆபாசமாக நடந்து வந்தது. கடந்த 4ம் தேதி அந்த பெண் வாட்ஸ்அப்பில் இளைஞருக்கு வீடியோ கால் செய்தார். அப்போது அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார்.

ஆடைகளை அவிழ்த்த இளைஞர்

மேலும் இளைஞரின் ஆடைகளையும் கழற்றும்படி அந்த பெண் பணித்தார்.இதனால் இளைஞரும் ஆசையில் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ கால் பேசினார். சிறிது நேரத்துக்கு பிறகு உரையாடல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தான் அந்த இளைஞருக்கு சிக்கல் ஏற்பட்டது.

பணம் கேட்டு மிரட்டல்
அதாவது வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய அந்த பெண், இளைஞருக்கு போன் செய்து, ‛‛நிர்வாணமாக இருக்கும் வீடியோ உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளேன். இதை செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் தர வேண்டும்'' னெ்று கூறினார்.

அதாவது இளைஞர் ஆடைகளை களைந்து அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசினார். அப்போது, அந்த பெண் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து மிரட்டியது தெரிந்தது. அப்போது தான் இளைஞர் அதிர்ந்து போனார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியே வந்தால் தன் மானம் போய்விடும் என்று இளைஞர் பயந்தார்.

பறிபோன ரூ.70,000
இதனால் ரூ.30 ஆயிரம் தருகிறேன். அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி பெண்ணிடம் கூறினார். அதற்கு அவரும் ‛ஓகே' என்று கூறினார். இதையடுத்து இளைஞர் ரூ.30 ஆயிரத்தை அவருக்கு அனுப்பினார்.

அந்த பணத்தை பெற்று கொண்ட அந்த பெண், இதுதான் சமயம் என்று அந்த இளைஞரை மிரட்டி கூடுதல் பணம் கேட்டார். மேற்கொண்டு ரூ.40 ஆயிரம் வரை பறித்தார். மொத்தம் ரூ.70 ஆயிரத்தை அந்த இளைஞர் பறிகொடுத்தார். அதன்பிறகும் அந்த பெண் விடவில்லை.

தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் வேறு வழியின்றி அந்த இளைஞர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் கூறியபடி 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X